"மகள் வயது நடிகை மீது மோகம்" பிரபல நடிகரை வம்புக்கு இழுக்கும் கவர்ச்சி நடிகை

நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி காதலிப்பதாக கூறி உள்ளார்.
"மகள் வயது நடிகை மீது மோகம்" பிரபல நடிகரை வம்புக்கு இழுக்கும் கவர்ச்சி நடிகை
Published on

ஐதராபாத்

தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு சினிமாவில் கோனா வெங்கட், விவா ஹர்ஷா, பவன் கல்யாண், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா, நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் நானி

பின்னர் பிரபல தமிழ் இயக்குநர்களான சுந்தர்.சி, முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.இவர்

ஏப்ரல் 2018 இல், ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட சேம்பர் ஆப் காமர்ஸ் முன் ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் தனது குற்றச்சாட்டுகளை கூறத்தொடங்கிவிட்டார்.

தற்போது நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி காதலிப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறி உள்ளார்.

'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி நடித்து உள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிரஞ்சீவியின் வார்த்தைகள் தான் ஸ்ரீ ரெட்டியை வருத்தப்படுத்தி உள்ளது.

விழாவில் சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷின் கையை பிடித்து கொண்டு பேசும் போது இந்தப் படத்தில் மட்டும் கீர்த்தி தங்கையாக நடித்து உள்ளார். அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக்க சம்மதிப்பதாகவும் சிரஞ்சீவி நகைச்சுவையாக கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

ஆனால் இது குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மகளின் வயது நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார். லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இப்படிப்பட்ட பேச்சு எப்படி சாத்தியம். இந்த காம ஜோக்குகளை எப்படி சொல்ல முடியும்? மவுனம் காத்தால் மரியாதை குறைந்து விடும் என கூறி உள்ளார்.

இந்த விமர்சனத்தை சிரஞ்சீவியின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை சிரஞ்சீவி நகைச்சுவையாக கூறியதாகவும், திரைக்கு வெளியே கீர்த்தியை சிரஞ்சீவி தனது மகளாகவே பார்க்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீ மேக் தான் இந்த போலோ சங்கர்.இப்படத்தில்  சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார்.மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். போலா ஷங்கர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் வேதாளம். கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாக இருந்தது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் சசுருதிஹாசன் நடித்திருந்தார். வேதாளம் படத்தில் மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது அண்ணன் - தங்கை பாசம் தான். இப்படத்தின் அஜித்துக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

வேதாளம் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடலாக இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com