‘எனது தலை, உங்கள் காலில் தல’ அஜித்தை பாராட்டிய ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.
‘எனது தலை, உங்கள் காலில் தல’ அஜித்தை பாராட்டிய ஸ்ரீரெட்டி
Published on

தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் சிலரும் இதில் சிக்கினர். பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு ஆதரவாக முகநூலில் அடிக்கடி கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தார். பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறினார். ஐதராபாத்தில் இருந்து வெளியேறி தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இந்த நிலையில் ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் நடிகர் அஜித்குமாரை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அஜித் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்வது இல்லை. அவர் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோ. சர்ச்சைகளில் இருந்து விலகியே இருப்பார். தன்மையாக பேசுவார். குடும்பத்தை மதிக்க கூடியவர். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். சிறந்த கணவர். சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடிக்கொண்டவர். எனது தலை உங்கள் காலில் தல

இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த பதிவு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com