வைரலாகும் ஆபாச படம் ஸ்ரீலீக்சில் சிக்கிய நடிகர் ராணாவின் தம்பி

பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பியுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
வைரலாகும் ஆபாச படம் ஸ்ரீலீக்சில் சிக்கிய நடிகர் ராணாவின் தம்பி
Published on

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி பட உலகை அதிரவைத்துள்ளார். ஸ்ரீலீக்ஸ் முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் புகைப்படங்கள் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளார். தெலுங்கு நடிகர் சங்கம் உறுப்பினர் அட்டை வழங்க மறுப்பதாக அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.

ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் தயாரிப்பாளர் ஒருவரின் மகன் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பலர் போலீஸ் தொல்லைகள் இருக்காது என்று கருதி ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராமுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இவர் தன்னிடம் ஸ்டூடியோவில் செக்ஸ் வைத்துக்கொண்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இதனால் ஸ்ரீரெட்டியுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஸ்ரீரெட்டி வெளியிட்ட புதிய புகாரில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கு பட உலகை 4 பெரிய குடும்பங்கள் ஆட்டி வைக்கிறது. அந்த குடும்பத்து பிள்ளைகளை சினிமாவில் வளர்த்து விட அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களை மீறி மற்றவர்கள் சினிமாவில் பிரபலமாவது கடினம். யாரேனும் வந்தாலும் அவர்களை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி ஒழித்து விடுவார்கள்.

சினிமா பின்னணி இல்லாமல் வந்த உதய்கிரன் போன்றோர் தற்கொலை செய்து இறக்கும் நிலைமை உள்ளது. தெலுங்கு பட உலகின் குறைகளை வெளியில் சொல்லாமல் இருக்க எனக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் நடத்தினார்கள். நான் எனக்காக மட்டுமின்றி மற்ற நடிகைகளுக்காகவும்தான் போராடுகிறேன்.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com