’கேஜிஎப்’ நடிகைக்கு குவியும் வாய்ப்பு...


Srinidhi Shetty joins Venkatesh-Trivikram film
x

கேஜிஎப் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

சென்னை,

ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர் தனது அடுத்த தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த முறை அவர் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார்.

வெங்கடேஷும் திரிவிக்ரமும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. ஸ்ரீநிதி ஷெட்டியின் பிறந்தநாளை(நேற்று) முன்னிட்டு, படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

கேஜிஎப் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நானிக்கு ஜோடியாக “ஹிட் 3” படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். சமீபத்தில் “தெலுசு கடா” படத்தில் நடித்திருந்தார். இது அவரது மூன்றாவது தெலுங்கு படமாகும்.


1 More update

Next Story