இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி பட உலகில் அதிர்வை ஏற்படுத்தினார்.
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
Published on

ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் அவர்கள் பெயர் விவரங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த புகாரில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆந்திராவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இனிமேல் சென்னையில்தான் வசிப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

சில நாட்கள் பாலியல் புகார்களை நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீரெட்டி இப்போது தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது சாடியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம் பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று கண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்கி மீதான ஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com