'''கில் பில்' மாதிரி படம் பண்ண ஆசை'' - ஸ்ரேயா ரெட்டி

ஸ்ரேயா ரெட்டி தற்போது இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' படத்தில் நடித்துள்ளார்.
Sriya Reddy: I want to do a film like Kill Bill
Published on

சென்னை,

விஷால் நடிப்பில் வெளியான ''திமிரு'' படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான ஸ்ரேயா ரெட்டி , சமீபத்தில் பிரபாஸ் நடித்த சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தையடுத்து ஸ்ரேயா ரெட்டி இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' படத்தில் நடித்துள்ளார். நேற்று திரைக்கு வந்த இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலின்போது, எதிர்காலத்தில் தான் நடிக்க விரும்பும் வேடங்கள் குறித்து பேசினார். கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ''கில் பில்'' போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாகவும் ஸ்ரேயா குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், ''எனக்கு கில் பில் போன்ற படம் பண்ண வேண்டும் என்று ஆசை. எனக்கு வாள் எடுத்து சண்டை போட பிடிக்கும். தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றிருக்கிறேன். நான் ஹீரோக்களையும் விட பிட்டாக இருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com