'கிங்': சுஹானா கானின் அம்மாவாக நடிக்கிறாரா தீபிகா படுகோன் ?

இப்படத்தை வார் மற்றும் பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.
SRK’s King: Deepika Padukone to play Suhana Khan’s mother?
Published on

மும்பை,

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு கடந்த 2002-ல் வெளியான தேவதாஸ் மிகப்பெரிய பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்', 'டங்கி' படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது இவர் 'கிங்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கானும் நடிக்கிறார். இப்படத்தை வார் மற்றும் பதான் பட புகழ், சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இந்நிலையில் , இப்படத்தில் சுஹானா கானின் அம்மாவாக நடிகை தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் ஷாருக்கானுடன், 'ஓம் சாந்தி ஓம்', சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்', 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com