பல நட்சத்திரங்களின் கேமியோவில் உருவாகும் ஷாருக்கான் மகனின் வெப் தொடர்?


SS Rajamouli with 3 Khans?
x

'தி பே***ட்ஸ் ஆப் பாலிவுட்'என்ற வெப் தொடர் மூலம் ஆர்யன் கான் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான். இவர் தற்போது 'தி பே***ட்ஸ் ஆப் பாலிவுட்'என்ற வெப் தொடர் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இந்த தொடரை ஷாருக்கான் தயாரிக்க நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதில், லக்சயா மற்றும் சஹர் பாம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆர்யன் கான் இயக்கும் இந்த வெப் தொடரில் ஷாருக்கானுடன் பல நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஷாருக்கானுடன், சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோரும் இடம் பெறுவதாக தெரிகிறது.

மேலும், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரும் நடிப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களைத் தவிர, பிரபல இயக்குனர்கள் கரண் ஜோஹர் மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோரும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.


1 More update

Next Story