''எஸ்.எஸ்.எம்.பி 29'' படத்தில் இணைந்த தமிழ் நடிகர்?


SSMB 29: Popular Kollywood actor roped in for a key role?
x

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணைந்து பணியாற்றுவது அவருக்கு இதுவே முதல் முறை.

சென்னை,

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தற்காலிகமாக ''எஸ்.எஸ்.எம்.பி 29'' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் மாதவன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு படங்களில் நடிப்பது அவருக்கு புதிதல்ல என்றாலும், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத, இப்படத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

1 More update

Next Story