ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பாடல் அப்டேட்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 15ம் தேதி வெளியாகிறது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த மிகப்பெரிய படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் நவம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இப்படத்திற்கு ஜென்63 மற்றும் வாரணாசி ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இந்நிலையில், சம்ஹாரி என்கிற இப்பாடலை நடிகை சுருதி ஹாசன் பாடியுள்ளார். எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி கவனம் பெற்று வருகிறது. ‘குளோப் டிராட்டர்’ நிகழ்ச்சியின்போது போஸ்டருக்கான பாடல் வீடியோவும் வெளியாகும் எனத் தெரிகிறது







