'பியார் பிரேமா காதல்' பட டைரக்டர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் - வெளியான தகவல்

டைரக்டர் இளன் அடுத்த படத்தை நடிகர் தனுஷைவைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'பியார் பிரேமா காதல்' பட டைரக்டர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் - வெளியான தகவல்
Published on

சென்னை,

தமிழில் 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் இளன். இவர் தற்போது இயக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக இப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்நிலையில், டைரக்டர் இளன் அடுத்ததாக இயக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த படத்தை நடிகர் தனுஷைவைத்து இயக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், இப்படத்தை மதுரையை மையமாக வைத்து எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com