பிடித்த இயக்குனருடன் 5-வது முறையாக கைகோர்க்கும் ஸ்டார் ஹீரோ

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கூட்டணி மீண்டும் தங்கள் மாயாஜாலத்தை திரைக்குக் கொண்டுவர உள்ளது.
சென்னை,
நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் இயக்குனர் லவ் ரஞ்சன் ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த நடிகர்-இயக்குனர் கூட்டணி புதிய படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
''சோனு கே டிடு கி ஸ்வீட்டி''யின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப்பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கூட்டணி மீண்டும் தங்கள் மாயாஜாலத்தை திரைக்குக் கொண்டுவர உள்ளது.
''பியார் கா பஞ்ச்னாமா'', ''பியார் கா பஞ்ச்னாமா 2'' , ''ஆகாஷ் வானி'' மற்றும் ''சோனு கே டிடு கி ஸ்வீட்டி'' ஆகியவை இவர்களது கூட்டணிகளில் உருவான படங்களாகும். ஒவ்வொரு படமும் நகைச்சுவை, காதல் ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் ரசிகர்களுக்கு பிடித்தமான கூட்டணியாக இது உள்ளது. இந்நிலையில், 5-வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.






