ரஜினிகாந்த் பிறந்தநாளில் முதல் பாடலை வெளியிடும் 'ஸ்டார்' படக்குழு..!

'ஸ்டார்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த் பிறந்தநாளில் முதல் பாடலை வெளியிடும் 'ஸ்டார்' படக்குழு..!
Published on

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். 'ஸ்டார்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'ஸ்டார்' படத்தின் முதல் பாடல் வருகிற 12-ந்தேதி, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனை சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com