ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. இதில் துஷரா விஜயன், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
Published on

சார்பட்டா பரம்பரை படம் வருகிற 22-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. இந்த படம் குறித்து நடிகர் ஆர்யா கூறும்போது, ஒரு குத்துச்சண்டை வீரரின் நுட்பங்கள் மற்றும் அவர்களது இயல்பு முறைகளை பெறுவதற்கு கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டு ஒரு முழுமையான மாற்றத்தை சந்தித்தேன். இது எனது முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாகும். மேலும் இது எனது வளர்ச்சிக்கு ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்றும் நம்புகிறேன். சார்பட்டா பரம்பரை படம் அதிரடி காட்சிகளுடன் பரபரப்பான அனுபவத்தை கொடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்'' என்றார்.

இயக்குனர் பா.ரஞ்சித் கூறும்போது, சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை மீதான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கும். இந்த கால கட்டத்தில் குத்துச்சண்டை என்பது விளையாட்டாக மட்டும் அல்லாமல் பாரம்பரியம் மற்றும் மரியாதையின் அடையாளமாக திகழ்கிறது. இந்த படம் சென்னையை பற்றி தெரியாத பல விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்லும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com