

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
இந்த படம் வருகிற 14ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் டிரெய்லரும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான் !!! .. பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது …!!!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கருப்பு படத்தின் மீதான உற்சாகத்தை ரசிகர்களுக்கு அதிகரிக்க செய்துள்ளது.