'ஹோலோகாஸ்ட்' பட சூட்டிங்கில் நடந்த வினோத நிகழ்வுகள்.. அதிர்ச்சியில் படக்குழு


ஹோலோகாஸ்ட் பட சூட்டிங்கில் நடந்த வினோத நிகழ்வுகள்.. அதிர்ச்சியில் படக்குழு
x

இயக்குனர் விஷ்ணு சந்திரன் ‘ஹோலோகாஸ்ட்’ என்ற படத்தை உண்மை சம்பவத்தை அடிப்டையாக கொண்டு உருவாக்கி வருகிறார்.

பிபின் மிட்டாதில் தயாரிப்பில் ஹோலோகாஸ்ட் என்ற படத்தை விஷ்ணு சந்திரன் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பலக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பின்போதே பல அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொண்டதாக நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் விஷ்ணு சந்திரன் கூறும்போது, "உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்தோம். பொதுவாக பேய் படங்கள் எடுக்கும்போது நிறைய அமானுஷ்ய விஷயங்களை கேள்விபட்டிருப்போம். நாங்கள் எங்கள் படத்தில் அதை உணர்ந்தோம்.

படத்துக்கான கதை எழுத தொடங்கியது முதலே பல இடையூறுகளுக்கு ஆளானேன். பெரிய விபத்தை சந்தித்தேன். ஒருநாள் இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் செல்லும்போது மீண்டும் விபத்தை எதிர்கொண்டோம். படத்தை எடுத்து முடிக்கும்போது, ஒரு கிராபிக்ஸ் காட்சிக்கு திட்டமிட்டோம். போதிய பணம் இல்லாததால் வருத்தம் கொண்ட நேரத்தில், இயற்கை ஒரு அதிசயத்தை செய்தது. அந்த காட்சியும் அபாரமாக எடுக்கப்பட்டது. அது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும். படம் விரைவில் வெளியாகிறது'', என்றார்.

1 More update

Next Story