பாடகரை கரம்பிடித்த ’ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்’ நடிகை

ஹாலிவுட் ரசிகர்கள் மாயா ஹாக் - கிறிஸ்டியன் லீ ஹட்சன் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பாடகரை கரம்பிடித்த ’ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்’ நடிகை
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

‘ஸ்டிரேஞ்சர்ஸ் திங்ஸ்’ தொடரின் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகை மாயா ஹாக் (27), பாடகர் கிறிஸ்டியன் லீ ஹட்சன் (35)-ஐ திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்ள எளிமையாக நடைபெற்றது.

இதில் ‘ஸ்டிரேஞ்சர்ஸ் திங்ஸ்’ தொடரில் இணைந்து நடித்த பின் வூல்ஹார்ட், கேடன் மடராசோ, காலெப் மெக்லாப்லின், சேடி சிங், நடாலியா டையர், சார்லி ஹீட்டன் மற்றும் ஜோ கீரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Also Read
முதல் சம்பளம் ரூ.500…இப்போது தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை - யார் அவர் தெரியுமா?
பாடகரை கரம்பிடித்த ’ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்’ நடிகை

திருமணத்திற்கு முன்பே இந்த ஜோடி பல பொதுநிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு நிச்சயதார்த்த செய்தி வெளியாகியிருந்த நிலையில், தற்போது திருமணம் நடைபெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஹாலிவுட் ரசிகர்கள் மாயா ஹாக் - கிறிஸ்டியன் லீ ஹட்சன் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com