உலக அளவில் ரூ.750 கோடியை நெருங்கும் பாலிவுட் திரைப்படம்!

'ஸ்ட்ரீ 2' படம் உலக அளவில் ரூ.750 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் ரூ.750 கோடியை நெருங்கும் பாலிவுட் திரைப்படம்!
Published on

மும்பை,

ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஸ்ட்ரீ'. ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் 'ஆஜ் கி ராத்' என்ற பாடலுக்கு நடிகை தமன்னா நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியான முதல் நாளே ரூ. 51.8 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது. இந்தப் படத்தை அமர் கௌசிக் இயக்க ஜியோ ஸ்டுடியோஸும் மட்டோக் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.3 நாள்களுக்கு முன்புவரை ரூ.593 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ராஜ்குமார் ராவ் படங்களில் இதுதான் அதிகமாக வசூலித்த திரைப்படமாக இருக்கிறது. இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த இந்திய படங்களின் வரிசையில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அக்சய் குமாரின் 'கேல் கேல் மெய்ன்' மற்றும் ஜான் ஆபிரகாமின் 'வேடா' படங்களுடன் மோதி 'ஸ்ட்ரீ 2' படம் இந்த வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com