ஆர்.கே.நகரில் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி கமல் கடும் விமர்சனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்துள்ளார். #RKnagarByElection #KamalHaasan
ஆர்.கே.நகரில் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி கமல் கடும் விமர்சனம்
Published on

சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடப்பு விவகாரங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த கமல், மீண்டும் அரசியல் தெடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தெடங்கி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மகத்தான பெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

#RKnagar / #KamalHaasan / #TTVdhinakaran

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com