

சென்னை,
ஜூலை மாதத்தில் வெளியான 'ஜன நாயகன்' மற்றும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படங்களின் வெற்றியால், மந்தநிலையிலிருந்த தமிழ் திரைப்படத் துறை மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் எழுச்சி கண்டுள்ளதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 139 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 18 திரைப்படங்கள் மட்டுமே வர்த்தக ரீதியாக வெற்றிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதன் மூலம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் தமிழ் சினிமாவின் வெற்றி விகிதம் 11 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
'கட்டா குஸ்தி 2' திரைப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 'ஜன நாயகன்' திரைப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மாதங்களில் பல முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இந்த வளர்ச்சி தொடரும் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.