இந்த வயதிலும் இவ்வளவு நாடகத்தனமா? திரிஷா பரபரப்பு பதிவு

நேற்று இரவு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் பேசுபொருளானது.

இந்த வயதிலும் இவ்வளவு நாடகத்தனமா? திரிஷா பரபரப்பு பதிவு
Published on

சென்னை,

நடிகை திரிஷா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில பதிவுகள் இணையத்தில் பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தின. திரிஷாவுக்கு அப்படி என்ன கோபம்? யாரை தாக்கி இந்த பதிவை வெளியிட்டார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

திரிஷா பரபரப்பு பதிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில பதிவுகள் இணையத்தில் பேசுபொருளானது. அவரது முதலாவது பதிவில், 'இந்த வயதிலும் இவ்வளவு நாடகத்தனமாக இருப்பது சங்கடத்தை தருகிறது. போய் பணத்தை சம்பாதியுங்கள். அமைதியை தேடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

முடிந்த வரை நல்லதையே செய்யுங்கள்

மற்றொரு பதிவில், 'நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். எனவே, முடிந்த வரை நல்லதையே செய்யுங்கள். நல்லவராகவே இருங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

திரிஷாவுக்கு அப்படி என்ன கோபம்?

அவரது 3-வது பதிவில், 'இதுதான் உங்களுக்கான அனைத்தும் சிறப்பாக அமையும் கால கட்டம்' என்று பதிவிட்டிருந்தார். திரிஷாவின் இந்த பதிவுகள் நேற்று பரபரப்பை ஏற்படுத்தின. அவரின் பதிவு குறித்து இணையதளத்தில் பெரும் விவாதமே நடந்தது. திரிஷாவுக்கு அப்படி என்ன கோபம்? யாரை தாக்கி இந்த பதிவை வெளியிட்டார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com