போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம் - பிரபல தயாரிப்பாளர் கைது

சினிமா பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை,
போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பமாக சினிமா தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே கைதாகியுள்ள சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் அளித்த தகவலில் இருவரும் சேர்ந்து பார்ட்டியின்போது போதைப்பொருள் உட்கொண்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
தினேஷ் ராஜ் "பிளாக்மெயில்" என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்து வரும் "லவ் ஓ லவ்" படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது இந்த தலைமுறைக்கு ஏற்ற காதல் படைப்பாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






