பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்...! மலையாள நடிகை மினு முனீர் கைது


பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்...! மலையாள நடிகை மினு முனீர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2025 2:47 PM IST (Updated: 14 Aug 2025 2:52 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தற்போது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மினி மூனிர் தனது உறவினரின் மகளான 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியை தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார். அப்போது, அந்த விடுதியில் நான்கு பேர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். பின் விடுதியில் இருந்த தப்பித்த அந்த சிறுமி தற்போது, நடிகை மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் நடிகை மினு முனீரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை சென்னை திருமங்கலத்துக்கு அழைத்து வந்து விசாரிக்க சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தற்போது நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் வழக்கு சென்னை திருமங்கலம் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, கேரள திரையுலகையே அதிர வைத்துவிட்டது. அதன் பின் பல நடிகைகள் பாலியல் புகார்களை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது முன்வைத்தனர். நடிகர் நடிகர் முகேஷ் , மணியன்பிள்ள ராஜூ , இடவேல பாபு , ஜெயசூர்யா என 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மினு முனீர் புகார் அளித்திருந்தார்.

1 More update

Next Story