சர்ச்சையில் சுதீப்பின் சிகை அலங்காரம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு

மாணவர்கள் சலூன் கடைகளுக்கு சென்று சுதீப்பை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்
சர்ச்சையில் சுதீப்பின் சிகை அலங்காரம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு
Published on

பிரபல கன்னட நடிகரான சுதீப், தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுதீப்பை கன்னட ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் ஹெப்பிலி என்ற கன்னட படத்தில் சுதீப் தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமாக சிகை அலங்காரம் செய்து இருந்தார். இதை பார்த்த மாணவர்கள் சலூன் கடைகளுக்கு சென்று சுதீப்பை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.

இதனால் கடுப்பான சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில், "ஹெப்பிலி படத்தின் சுதீப் சிகை அலங்காரத்தை பார்த்து பள்ளி மாணவர்களும் தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள்.

இந்த பழக்கத்தால் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் சிகை அலரங்காரம் செய்ய வேண்டாம்'' என்று கூறியுள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com