அதர்வாவின் 'டி.என்.ஏ' படத்தை பாராட்டிய சுதா கொங்கரா


அதர்வாவின் டி.என்.ஏ படத்தை பாராட்டிய சுதா கொங்கரா
x
தினத்தந்தி 23 Jun 2025 6:30 PM IST (Updated: 23 Jun 2025 6:30 PM IST)
t-max-icont-min-icon

அதர்வா, நிமிஷா நடித்துள்ள 'டி.என்.ஏ' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவரது நடிப்பில் கடந்த 20-ந் தேதி 'டி.என்.ஏ' படம் வெளியானது. இந்த படத்தினை நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரமேஷ் திலக், சேட்டன், ரித்விகா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல இயக்குனரான சுதா கொங்கரா "டி.என்.ஏ" படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், " டி.என்.ஏ கதையை நெல்சன் வெங்கடேசன் எப்போதும் போல அழகாக இயக்கியுள்ளார். அதர்வா, நிமிஷா, சேட்டன், பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பு அருமையாக இருந்தது. பார்வையாளர்களுடன் கண்ணீர் விட்டு ஆரவாரம் செய்தேன். இது ஒரு அழகான படம்!" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story