சுஹாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் புரோமோ வெளியீடு

ராஜேந்திர பாலா இயக்கத்தில் சுஹாஸ், சஞ்சனா நடிக்கும் திரைப்படம் ‘ஹைட் அண்ட் சில்க்’.
சுஹாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் புரோமோ வெளியீடு
Published on: 

‘மண்டாடி’ பட வில்லன் சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹைட் அண்ட் சில்க்’ படத்தின் டைட்டில் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் அண்ட் சில்க்’. ‘மண்டாடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுஹாஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

டைட்டில் புரமோ வெளியீடு

இந்நிலையில், ‘மண்டாடி’ பட வில்லன் சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹைட் அண்ட் சில்க்’ படத்தின் டைட்டில் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும் இப்படத்தின் டைட்டில் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

படத்தின் வித்தியாசமான கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் புரோமோ ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com