நடிகைக்கு உருகி உருகி கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்

தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம் எழுதியுள்ளார்.
நடிகைக்கு உருகி உருகி கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்
Published on

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள அக்கடித வரிகள் வருமாறு:-

'என்னோட பொம்மா (அழகுப் பொம்மையே), நான் எனது பிறந்தநாள் வேளையில் உன்னை ரொம்பவே 'மிஸ்' செய்கிறேன். என்னைச் சுற்றி உனது சக்தி இல்லாது தவிக்கிறேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் என் மீதான உன் அன்பு எப்போதும் முடிவடையாது, என் மீது முழுமையாக உள்ளது என்பதை நானறிவேன். உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதற்கு எந்தச் சான்றும் தேவையில்லை. உன் அன்புதான் எனக்கு முக்கியம் பேபி.

நான் உன்னை 'மிஸ்' செய்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். என் 'பொட்ட பொம்மா' (கொழுகொழு பொம்மையே)... நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாய். நீயும், உனது அன்பும் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசுகள். என் வாழ்வில் அவை விலைமதிப்பற்றவை. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என்பதை நீ அறிவாய். என் பேபியே... உன்னை நேசிக்கிறேன். உன் இதயத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. எனது பிறந்தநாளில் வாழ்த்திய என்னுடைய அனைத்து ஆதரவாளர்கள், நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நூற்றுக்கணக்கான கடிதங்கள், வாழ்த்துகளைப் பெற்றேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நன்றி.'

இப்படி நெகிழ்ந்து, மகிழ்ந்து, காதலை பிழிந்து கடிதம் எழுதியிருக்கிறார், சுகேஷ் சந்திரசேகர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com