சுனைனா நடித்துள்ள 'ரெஜினா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

சுனைனா நடித்துள்ள 'ரெஜினா' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனைனா நடித்துள்ள 'ரெஜினா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இந்த படத்திற்கு பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'ரெஜினா' படத்தின் டீசர் மே 30-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com