பிரபல யூடியூபரை மணக்கிறாரா நடிகை சுனைனா?

சுனைனா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
Sunainaa engaged to popular Youtuber Khalid Al Ameri
Published on

சென்னை,

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், ரெஜினா, சில்லுக்கருப்பட்டி, தொண்டன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தினை பிரபல யூடியூபர் கலீத் அல் அம்ரி லைக் செய்திருந்தார். இதனையடுத்து இவருடன்தான் சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று தகவல்கள் பரவின. தற்போது சுனைனா செய்த செயல் இதற்கு மேலும் வலுக்கொடுத்துள்ளது.

சுனைனா பகிர்ந்த புகைப்படத்தை போன்று பிரபல யூடியூபர் கலீத் அல் அம்ரியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை நடிகை சுனைனா லைக் செய்துள்ளார். இதனையடுத்து இணையத்தில் பரவும் தகவல்கள் உண்மைதான் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

கலீத் அல் அம்ரிக்கு ஏற்கனவே சலாமா முகமது என்பவருடன் திருமணமானது. சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com