

சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படத்தின் முதல் 2 பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது, அரண்மனை-3 உருவாகி வருகிறது.
இந்த படத்துக்காக சென்னையை அடுத்த ஈ வி பி பிலிம்சிட்டியில் ரூ.2 கோடி செலவில் கலை இயக்குனர் குருராஜன் கைவண்ணத்தில், பிரமாண்டமான அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டு, அதில் சண்டை காட்சி படமாக்கப் பட்டது.
சுந்தர் சி.யும், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர்ஹெய்னும் இணைந்து பணிபுரிந்த முதல் படம், இது. படத்தின் உச்சக்கட்ட சண்டை காட்சி 11 நாட்கள் படமாக்கப்பட்டது. பேய் படத்துக்கு ரூ.2 கோடி செலவில் அரங்கு அமைக்கப்பட்டது, இதுதான் முதல் முறை என்கிறார்கள்.
அந்த அரங்கில் ஆர்யா, ராஷிகன்னா, சுந்தர் சி, சம்பத், மதுசூதனராவ் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தார்கள். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சில முக்கிய காட்சிகளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இன்னும் சில காட்சிகளை பொள்ளாச்சியில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.