மீண்டும் தொடங்கும் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா' படம்


மீண்டும் தொடங்கும் சுந்தர் சி-யின் சங்கமித்ரா படம்
x
தினத்தந்தி 21 Jan 2025 3:29 PM IST (Updated: 19 April 2025 3:16 PM IST)
t-max-icont-min-icon

கிடப்பில் போடப்பட்ட 'சங்கமித்ரா' சரித்திர படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நகைச்சுவை, காதல், பேய் படங்களை எடுப்பதில் பிரபலமான சுந்தர்.சி முதல் தடவையாக 8-ம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சங்கமித்ரா என்ற சரித்திர கதையை படமாக்குவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இதில் ரவி மோகன், ஆர்யா, சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதன் போஸ்டர்கள் 2017-ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. பாகுபலி, பொன்னியின் செல்வன், கே.ஜி.எப் படங்களுக்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் வைக்கவும் முடிவு செய்தனர். ஆனால் ஒரு சில பிரச்சினையால் நீண்ட நாட்களாக படப்பிடிப்பை தொடங்காமல் கிடப்பில் போட்டனர்.

இந்த நிலையில் தற்போது 'சங்கமித்ரா' பட பணிகளை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு 2026-ம் ஆண்டு தொடங்கும் என புதிய தகவல் கிடைத்துள்ளது. படப்பிடிப்பு தேதி மற்றும் இறுதி செய்யப்பட்ட நடிகர், நடிகைகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story