'சிக்மா' டப்பிங் பணியை நிறைவு செய்த சந்தீப் கிஷன்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்த ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31 வெளியாகவுள்ளது.

'சிக்மா'  டப்பிங் பணியை நிறைவு செய்த சந்தீப் கிஷன்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான ‘சிக்மா’

ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலில் ஜேசன் சஞ்சய் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியிருந்தனர். தற்போது படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

டப்பிங் பணிகளை முடித்த சந்தீப் கிஷன்

வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில், நடிகர் சந்தீப் கிஷன் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com