'டார்லிங்' பட இயக்குனருடன் இணையும் சுந்தீப் கிஷன்

சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தை ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் அன்டன் இயக்க உள்ளார்.
'டார்லிங்' பட இயக்குனருடன் இணையும் சுந்தீப் கிஷன்
Published on

நடிகர் ஜி.வி. பிரகாஷின் 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சாம் அன்டன். இவர் இயக்கத்தில் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்கள் உருவாகியுள்ளது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான "எனக்கு இன்னொரு பேர் இருக்கு", அதர்வாவின் "100" மற்றும் "ட்ரிகர்" அதேபோல யோகிபாபுவின் "கூர்கா" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியது சாம் அன்டன்தான். அதேபோல கூர்கா திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தயாரித்தும் வழங்கியிருந்தார் சாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய முதல் திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சாம் அன்டன் இயக்க உள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com