சந்தீப் கிஷனின் புதிய பட டைட்டில் போஸ்டர் வெளியீடு

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்திற்கு ‘பவர் பேடா’ என பெயரிடப்பட்டுள்ளது.
சந்தீப் கிஷனின் புதிய பட  டைட்டில் போஸ்டர் வெளியீடு
Published on

நடிகர் சந்தீப் கிஷன் மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வந்த ‘மைக்கேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் இயக்கும் ‘சிக்மா’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘பவர் பேடா’ என பெயரிடப்பட்டுள்ளது. 70 எம்எம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார்.

‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட… யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கவுரவம் – அரசியல்- ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

சந்தீப் கிஷன் திரையுலகில் திரைத்துறையில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com