சந்தீப் கிஷனின் “பவர் பேடா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

சந்தீப் கிஷனின் பிறந்த நாளையொட்டி ‘பவர் பேட்டா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சந்தீப் கிஷனின் “பவர் பேடா” படத்தின் கிளிம்ப்ஸ்  வீடியோ வெளியீடு
Published on

நடிகர் சந்தீப் கிஷன் மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வந்த ‘மைக்கேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் இயக்கும் ‘சிக்மா’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு ‘பவர் பேடா’ என பெயரிடப்பட்டுள்ளது. 70 எம்எம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், சந்தீப் கிஷனின் பிறந்த நாளையொட்டி ‘பவர் பேட்டா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தீப் கிஷன் திரைத்துறையில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com