சுந்தர் சி - ஜெய் இணைந்து நடிக்கும் திகில் படம், ‘பட்டாம்பூச்சி’

குஷ்பு சுந்தர் சி. தயாரித்து வழங்கும் புதிய படத்துக்கு, ‘பட்டாம்பூச்சி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
சுந்தர் சி - ஜெய் இணைந்து நடிக்கும் திகில் படம், ‘பட்டாம்பூச்சி’
Published on

இந்தப் படத்தை பற்றி டைரக்டரும், நடிகருமான சுந்தர் சி. கூறியதாவது:-

இது ஒரு சைக்கோ திகில் படம். 1980-ல் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல கொலைகளை செய்த கொடூரமான சைக்கோ கொலைகாரனுக்கும், பொறுப்புகளை தவிர்த்து அமைதியாக வாழ நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் மனதளவில் நடக்கும் போர்தான் கதை. ஒருவரையொருவர் உடலாலும், புத்திசாலித்தனத்தாலும் ஜெயிக்க நினைப்பது திரைக்கதையின் கூடுதல் பலம். போலீசுக்கு பிடி படாத பல கொலைகளை செய்த சைக்கோ கொலைகாரன் பட்டாம்பூச்சி என்ற ரகசியம் ஒரு நிருபருக்கு தெரியவருகிறது.

அங்கிருந்து வேகம் பிடிக்கும் கதை ஒவ்வொரு காட்சியிலும் இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும். கொடூரமான சைக்கோவாக முதன்முதலாக எதிர்மறை நாயகனாக ஜெய் நடிக்கிறார். அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர துடிக்கும் போலீஸ் அதிகாரியாக நான் (சுந்தர் சி.) நடிக்கிறேன்.

கதாநாயகி, ஹனிரோஸ். முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். பத்ரி டைரக்டு செய்கிறார். படம், அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com