'அவரிடம் தேவதைக்குரிய லட்சணமே இல்லை' - நடிகர் சுனில் லாஹ்ரி

ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.
'அவரிடம் தேவதைக்குரிய லட்சணமே இல்லை' - நடிகர் சுனில் லாஹ்ரி
Published on

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைதளத்தில் கசிந்து வைரலாகின. சீதை கதாபாத்திரத்துக்கு சாய்பல்லவி பொருத்தமானவர் இல்லை என்று ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் லட்சுமணனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறும்போது,"அனிமல் படம் பார்த்த பிறகு அதில் நடித்து இருந்த ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால் அவரது முகத்தில் சீதை சாயல் கொஞ்சமும் இல்லை. எனவே சீதையாக அவர் எப்படி நடிக்க போகிறார் என்று எனக்கு புரியவில்லை. சாய்பல்லவி நடித்த படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அவர் முகத்தில் தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை'' என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com