''என் வயிற்றில் குழந்தையை சுமக்க நான் விரும்பவில்லை'' - சன்னி லியோன்

சன்னி லியோன் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் டேனியல் வெபனரை திருமணம் செய்து கொண்டார்.
சென்னை,
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த ''ஜிஸம் 2'' திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கலக்கி வந்தார். தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
சன்னி லியோன் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் டேனியல் வெபனரை திருமணம் செய்து கொண்டார். 2017-ம் ஆண்டு நிஷா என்ற இரண்டு வயது மகளை இருவரும் தத்தெடுத்தனர். 2018-ம் ஆண்டு வாடகை தாய் மூலம் நோவா மற்றும் ஆசர் என்ற இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரானார்கள்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், கர்ப்பமாகி தன் வயிற்றில் குழந்தையை சுமக்க விரும்பவில்லை என்று கூறினார். அவர் கூறுகையில்,
''நான் நீண்ட காலமாக குழந்தைகளை தத்தெடுப்பது பற்றி யோசித்து வந்தேன். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை எங்களுக்கு கை கொடுக்கவில்லை. அதனால் குழந்தை தத்தெடுப்புக்கு விண்ணப்பித்தோம். இதை தொடர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தோம். நான் கர்ப்பமாகி என் வயிற்றில் குழந்தையை சுமக்க விரும்பவில்லை. அதனால் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற முடிவு செய்தோம்'' என்றார்.






