கவர்ச்சி நடனம் ஆட சன்னி லியோன் நிபந்தனை

கவர்ச்சி நடனம் ஆட சன்னிலியோன் புதிய நிபந்தனை விதித்துள்ளார்.
கவர்ச்சி நடனம் ஆட சன்னி லியோன் நிபந்தனை
Published on

நடிகை சன்னி லியோன் தமிழில் வட கறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தற்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கவர்ச்சி நடனம் ஆட சன்னிலியோன் புதிய நிபந்தனை விதித்துள்ளார். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை எடுத்து பிரபலமான டி.எம்.ஜெயமுருகன் தற்போது தீ இவன் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் கார்த்தி, சுகன்யா, ராதாரவி, சுமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆட சன்னிலியோனை அணுகியபோதுகதையை கேட்டு உடனே ஆட சம்மதித்துள்ளார். அதோடு பாடல் காட்சி படப்பிடிப்பில் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது, கொரோனா நோய் தடுப்பு மருத்துவமுறைகள் பின்பற்ற வேண்டும், என்னுடன் ஆடுபவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றெல்லாம் பல நிபந்தனைகள் விதித்தாராம். அதனை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டு உள்ளனர். சன்னி லியோன் கூறும்போது, தமிழ் படங்களில் நடிக்கவும், நடனம் ஆடவும் எனக்கு எப்போதுமே விருப்பம் உண்டு. ஓ மை கோஸ்ட் படத்தில் நடிக்கிறேன். தீ இவன் படத்தில் ஆடுகிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com