'ஓ மை கோஸ்ட்' இசை வெளியிட்டு விழா சன்னி லியோன், ஜி.பி.முத்து...! கலக்கல்

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் உடன் ஜி.பி.இணைந்து நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
'ஓ மை கோஸ்ட்' இசை வெளியிட்டு விழா சன்னி லியோன், ஜி.பி.முத்து...! கலக்கல்
Published on

சென்னை

சிந்தனை செய் படத்தின் இயக்குனரான ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஓ மை கோஸ்ட். இதில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சன்னி லியோன் உLபட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஜி.பி.முத்து, "இது தான் எனக்கு முதல் படம். டைரக்டர்ட்ட சொன்னேன், சார் இதுக்கு முன்னாடி நான் எந்த படமும் நடிச்சது கிடையாது. சின்ன சின்ன ஷார்ட் பிலிம் டிக்டாக்கெல்லாம் போட்டுருக்கேன். எனக்கு பயமா இருக்குனு. அதுக்கு, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் சொல்ற படி நடிங்க. சூப்பரா இருக்கும்னாங்க. சொல்லி தந்த மாதிரி நான் நடிச்சேன்.

சன்னி லியோன் யாருனு எனக்கு தெரியாது. சன்னி லியோன் யாருனு சொல்லி ஆனந்த் சில படத்தையெல்லாம் காமிச்சான். அய்யயோ... படம்னா... சன்னி லியோன் படம்னா, என்ன படம்னு காமிச்சான். மத்த படி தப்பா நினைக்காதீங்க. சன்னி லியோனும் நானும் சேர்ந்து நடிக்கற மாதிரி சான்ஸ் இருந்துச்சு. என் நண்பன் இறந்ததுனால அதுல வர முடியாம போச்சு.

படத்துல எனக்கு சூப்பர் கேரக்டர் தந்தாங்க. அந்த டாக்டர் பேர கேட்டாவே எனக்கு சிரிப்பா இருக்கு. அந்த படத்துல பாருங்க. டாக்டர் கேரக்டர் புரியும் உங்களுக்கு. ரொம்ப நல்லாருந்துச்சு. டைரக்டர் சார்.. ரொம்ப சந்தோசம் முத முத பட வாய்ப்பைக் கொடுத்ததுக்கு உங்கள மறக்கவே முடியாது.. நயன்தாரா, சிம்ரன் கூட நடிக்கணும்னு ஆசையா இருக்கு" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com