சன்னி லியோனின் முதல் ஹாலிவுட் படம்...வைரலாகும் பர்ஸ்ட் லுக்

அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது சன்னி லியோன் முடித்துள்ளார்.
மும்பை,
நடிகை சன்னி லியோன் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்த சன்னி லியோன், தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். 'ஓ மை கோஸ்ட், தீ இவன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், நடிகை சன்னி லியோன் ஒரு சுயாதீன திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது அவர் முடித்துள்ளார். அவரது பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






