சூப்பர் சிங்கர் சீசன் 10 - டைட்டில் வின்னர் யார்?...பரிசு தொகை எவ்வளவு?

Image Courtesy: twitter @vijaytelevision
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சென்னை,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீனியர், ஜூனியர் என்று அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில், டைட்டில் வின்னராக காயத்ரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசை நஸ்ரின் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
அதேபோல் 3-வது இடத்தை சாரா சுருதி மற்றும் ஆத்யா இருவரும் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களுக்கு கமல்ஹாசனும் ஏ.ஆர் ரகுமானும் இணைந்து பரிசுகளை வழங்கினர்.
'தக் லைப்' படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், படத்தின் புரமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் மற்றும் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.






