ரூ.1000 கோடி நஷ்டத்தில் “சூப்பர்கேர்ள்” படம்?

டிசி நிறுவனம் தயாரித்த ‘சூப்பர்கேர்ள்’ படம் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியானது.
ரூ.1000 கோடி நஷ்டத்தில்  “சூப்பர்கேர்ள்” படம்?
Published on

ஹாலிவுட்டில் மார்வெல், டிசி நிறுவனங்களின் கீழ் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வருகின்றனர். இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோஸ், சூப்பர் ஹீரோயின்ஸ் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சமீப காலமாக ஹீரோயின்களை மையப்படுத்தி பல சூப்பர் ஹீரோயின்ஸ் படங்கள் வருகிறது. அந்த வகையில் ‘சூப்பர் கேர்ள்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் 175 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டுள்ளது,

கிரேக் கில்லெஸ்பி இயக்கியுள்ள இப்படத்தில் சூப்பர் கேர்ளாக மில்லி அல்காக் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியானது. இப்படத்தில் சூப்பர்வில்லன் லோபோவாக ஜேசன் மோமோவ் நடித்துள்ளார்.

‘சூப்பர்கேர்ள்’ படம் மற்ற படங்களைப் போல பெரிய வரவேற்பை பெறவில்லை. கதையும் தொழில்நுட்பத் தரமும் போதுமான அளவு இல்லை என்பதே படத்தின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள். இதனால் இந்திய மதிப்பில் 1000 கோடி வரை இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 150 மில்லியன் டாலர் வசூல் செய்தாலே ஆச்சரியம் தான் என ஹாலிவுட் பாக்ஸ் ஆபீசில் பேசப்படுகிறது.

‘சூப்பர் மேன்’ படமே பெரியளவில் ஹிட் ஆகாத நிலையில் தற்போது ‘சூப்பர் கேர்ள்’ நஷ்டம் சூப்பர் ஹீரோஸ் யூனிவர்ஸை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதை தொடர்ந்து ‘சூப்பர் மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com