''சூப்பர்மேன்'' படத்தின் அடுத்த பாகம்....பெயர், ரிலீஸ் தேதி அறிவிப்பு


Superman sequel from James Gunn gets official title and release date
x
தினத்தந்தி 7 Sept 2025 4:00 PM IST (Updated: 7 Sept 2025 4:00 PM IST)
t-max-icont-min-icon

சூப்பர் மேன் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் வெளியாக இருக்கிறது.

சென்னை,

டிசி நிறுவனம் தயாரித்த சூப்பர்மேன் படத்தின் மாபெரும்வெற்றிக்குப் பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் கன் அதன் அடுத்த பாகத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

இப்படத்திற்கு ''மேன் ஆப் டுமாரோ'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 2027 இல் ஜூலை 9 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதன் முதல் பாகம் ( சூப்பர் மேன்) வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் வெளியாக இருக்கிறது.

டிசி ஸ்டுடியோஸில் அடுத்ததாக, ''சூப்பர் கேர்ள்'' படம் அடுத்தாண்டு ஜூன் 26 அன்று வெளியாக உள்ளது, அதைத் தொடர்ந்து திகில் படமான ''கிளேபேஸ்'' அடுத்தாண்டு செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது.


1 More update

Next Story