2 படங்​கள் நடித்​தாலே சூப்​பர் ஸ்டாரா? விஜய்​ பட நடிகை கேள்வி

பாலிவுட்​டில் இளம் நடிகைகள் போலி பப்​ளிசிட்டி மூலம் சூப்​பர் ஸ்டார் பிம்​பத்தை உரு​வாக்க முயற்​சிப்​ப​தாக பாலிவுட் நடிகை அமிஷா படேல் சாடி​யுள்​ளார்.
2 படங்​கள் நடித்​தாலே சூப்​பர் ஸ்டாரா?  விஜய்​ பட நடிகை கேள்வி
Published on

விஜய் நடித்த ‘புதிய கீதை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். பாலிவுட்​டில் இளம் நடிகைகள் போலி பப்​ளிசிட்டி மூலம் சூப்​பர் ஸ்டார் பிம்​பத்தை உரு​வாக்க முயற்​சிப்​ப​தாக சாடி​யுள்​ளார். சினி​மா​வில் போலி​யான பப்​ளிசிட்டி மூலம் தங்​களை முன்னிலைப்​படுத்​தும் போக்கு நடிகர், நடிகை​களிடையே இருப்பதாகக் கூறப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் அது தொடர்பாகத் தனது சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டுள்ள நடிகை அமிஷா படேல், “பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்​து, பெரும் தாக்கத்தை ஏற்​படுத்​தும் படங்​களைக் கொடுத்​திருந்​தால் உங்களை சூப்​பர் ஸ்டார் என்று அழைத்​துக் ​கொள்​ளுங்​கள். அது​வரை, சூப்​பர் ஸ்டார் என்​கிற விளம்பர விளை​யாட்டு விளையாடு​வதை நிறுத்​துங்​கள். மன்​னிக்​க​வும், ஆனால் இது​தான் கசப்பான உண்​மை. தங்​கள் திரை வாழ்க்​கை​யில் ஒரு தனி பிளாக்பஸ்டர் படம் கூட கொடுக்​காத ஏராள​மான நடிகைகள், வருடத்​துக்கு 2 சாதா​ரணப் படங்​களில் நடித்​து, சில படப்​பிடிப்​புத் தளங்​களில் இருப்​ப​தால், தங்​களை நட்​சத்​திரங்​கள் என்று அழைத்துக் ​கொள்​கிறார்​கள்.

ஒரு படம் கூட பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலிக்காத பெரும்​பாலான நடிகைகள், தங்​களை நம்​பர் 1 மற்றும் நம்​பர் 2 என்று அழைத்​துக்​கொள்ள விளம்​பரக் குழுக்களுக்​குப் பணம் கொடுக்​கிறார்​கள். இது 2026-ம் வருடம். ரூ.100 கோடி வசூல் கூட இன்று பெரிய விஷ​யம் அல்ல” என்று தெரி​வித்​துள்​ளார். அமிஷா படேலின் இந்​தப் பதிவு சர்​ச்​சையை ஏற்​படுத்தி இருக்​கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com