'சூப்பர் உமன்' இணையத்தில் சினிமா ரசிகர்கள் நடத்திய வித்தியாசமான அழகி போட்டி


சூப்பர் உமன் இணையத்தில் சினிமா ரசிகர்கள் நடத்திய வித்தியாசமான அழகி போட்டி
x
தினத்தந்தி 23 July 2025 7:26 AM IST (Updated: 23 July 2025 7:27 AM IST)
t-max-icont-min-icon

நேற்று இணையத்தில் நடந்த ஒரு வித்தியாசமான அழகிப்போட்டி அனைவரையுமே வெகுவாக கவர்ந்தது.

தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் பெருமைகள் பேசி சண்டை போட்டுக்கொள்ளும் ரசிகர்களை பார்த்திருப்போம். ஆனால் நேற்று இணையத்தில் நடந்த ஒரு வித்தியாசமான அழகிப்போட்டி அனைவரையுமே வெகுவாக கவர்ந்தது. ஹாலிவுட் படங்களில் வரும் 'சூப்பர் மேன்' கதாபாத்திரங்கள் போன்று, 'சூப்பர் உமன்' கதாபாத்திரங்களும் பிரபலம். அந்தவகையில் தமன்னா, சுருதிஹாசன் மற்றும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் ஆகியோரை குறும்புக்கார ரசிகர்கள் சிலர் கோதாவில் களமிறக்கி விட்டனர்.

அதாவது, நடிகைகளுக்கு ஏ.ஐ. வசதி மூலமாக 'சூப்பர் உமன்' கதாபாத்திர உடைகளை அணிவித்து, இதில் உண்மையிலேயே 'சூப்பரான அழகி' யார்? என்று போட்டியும் வைத்துவிட்டார்கள். தங்கள் அபிமான நடிகையைப் புகழ்ந்து ஒவ்வொருவரும் 'கமெண்ட்'டுகளை அள்ளிவீச நேற்று இணையதளமே பரபரப்பானது. இது சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

1 More update

Next Story