“என் திருமணத்திற்கு முன் என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைப்பேன்” - நடிகை சுப்ரிதா

நடிகை சுரேகா வாணி, தனது கணவர் மறைவுக்குப் பிறகு மகள் சுப்ரிதாவையே உலகமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
“என் திருமணத்திற்கு முன் என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைப்பேன்” - நடிகை சுப்ரிதா
Published on

ஐதராபாத்,

நடிகை சுரேகா வாணியின் இரண்டாவது திருமணம் குறித்து மகள் சுப்ரிதா பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சினிமா துறையில் தனித்த இடத்தைப் பிடித்துள்ள சுரேகா வாணி, தனது கணவர் மறைவுக்குப் பிறகு மகள் சுப்ரிதாவையே தனது உலகமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அம்மாவின் எதிர்காலம் குறித்து சுப்ரிதா கூறிய கருத்துகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also Read
அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை - நடிகை பிரியங்கா மோகன்
“என் திருமணத்திற்கு முன் என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைப்பேன்” - நடிகை சுப்ரிதா

அவர் பேசுகையில், “நான் திருமணம் செய்து வேறு வீட்டிற்கு செல்லும் முன், என் அம்மாவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும். அவரை நேசிக்கும், மதிக்கும் ஒருவர் அவருடைய வாழ்க்கையில் வர வேண்டும் என்பதே என் ஆசை.

என் அம்மாவின் மகிழ்ச்சிதான் முக்கியம். இறுதி முடிவு அவருடையது. அவர் என் அப்பாவின் இடத்தை வேறு யாருக்கும் தர விரும்பவில்லை என்பதையும் நான் மதிக்கிறேன். அவருக்கு விருப்பமில்லை என்றால் நான் வற்புறுத்த மாட்டேன். ஆனால், அவர் வாழ்க்கை முழுவதும் தனியாக இருக்கக் கூடாது என்பதே என் ஆசை,” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com