இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்...தமிழ் திரைத்துறையில் கால் பதிக்கும் சுரேஷ் ரெய்னா


Suresh Raina is entering the Tamil film industry
x

சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகும் இந்த படத்தை லோகன் எழுதி, இயக்குகிறார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார்.

டிரீம் நைட் ஸ்டோரிஸ் பிரைவேட் லிமிடெட் (டி.கே.எஸ்.) சார்பில் டி.சரவணகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சுரேஷ் ரெய்னா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகும் இந்த படத்தை லோகன் எழுதி, இயக்குகிறார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், "தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு நான் பல கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது.

தமிழகம் எனக்கு பிடித்த இடம். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்'', என்றார். கதாநாயகனாக களமிறங்கும் சுரேஷ் ரெய்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுரேஷ் ரெய்னாவுக்கு ரசிகர்கள் ஏராளம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடினார். 2022-ம் ஆண்டுடன் எல்லா வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றார்.

1 More update

Next Story