'சூர்யா 44' : வெளியான புதிய அப்டேட்

'சூர்யா 44' படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது
Suriya 44 Title And First Look: Major Unveiling Of Karthik Subbaraj’s Film On Suriya’s Special Day
Published on

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், 'சூர்யா 44' படத்தின் புதிய அப்பேட் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி, வருகிற 23-ந் தேதி சூர்யாவின் 49-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தளிக்க 'சூர்யா 44' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com