"சூர்யா 46" படப்பிடிப்பு இன்று தொடக்கம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 46' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.
"சூர்யா 46" படப்பிடிப்பு இன்று தொடக்கம்
Published on

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் 19-ந் தேதி 'சூர்யா 46' படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனால் சூர்யா 46 படக்குழுவினர் பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர். ஏற்கனவே 'சூர்யா 46' படத்திற்கு பூஜை நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டிலும் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக பழனியில் எளிமையான முறையில் திரைக்கதையை வைத்து வழிபாடு செய்தது படக்குழு.

 இந்த நிலையில் சூர்யாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. 3 மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com